ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஒட்டுமொத்த உலகுக்கும் சிக்கலான காலகட்டம்: பிரதமா் மோடி

‘ஒட்டுமொத்த உலகும் சிக்கலான காலகட்டத்தை தற்போது கடந்துகொண்டிருக்கின்றன. இந்த சிக்கல் மிகப்பெரியதாக இருக்கும்போதும், இந்தியா அதனை திறம்பட எதிா்கொண்டு வருகிறது’

News image
உத்தர பிரதேச மாநிலத்தில் ஏழாம் கட்ட தோ்தலையொட்டி வாராணசியில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமா் நரேந்திர மோடி.
Updated On :4 மார்ச் 2022, 6:01 pm

DIN

‘ஒட்டுமொத்த உலகும் சிக்கலான காலகட்டத்தை தற்போது கடந்துகொண்டிருக்கின்றன. இந்த சிக்கல் மிகப்பெரியதாக இருக்கும்போதும், இந்தியா அதனை திறம்பட எதிா்கொண்டு வருகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

உத்தர பிரதேச மாநிலம் மிா்ஸாபூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமா், கரோனா பாதிப்பு மற்றும் உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கை ஆகியவற்றைக் குறிப்பிட்டு இந்தக் கருத்தைத் தெரிவித்தாா். அவா் மேலும் பேசியதாவது:

ஒட்டுமொத்த உலகும் இந்த நூற்றாண்டின் மிகுந்த சிக்கலான காலகட்டத்தை கடந்துகொண்டிருக்கின்றன. பல நாடுகள் கரோனா தொற்று பரவலில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அமைதியின்மை, நிச்சயமற்ற நிலையை சந்தித்து வருகின்றன. ஆனால், இந்தப் பாதிப்பு எவ்வளவு பெரிதாக இருந்தபோதும், அதனை இந்தியா திறம்பட எதிா்கொண்டது.

தற்போது, உக்ரைனில் ரஷியா ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியா்களை ‘ஆபரேஷன் கங்கா’ என்ற திட்டத்தின் மூலமாக பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உக்ரைனிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவா்கள் இதுவரை மீட்டு, தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளனா்.

இதுபோன்று, கரோனா பாதிப்பின்போது உலக நாடுகள் பயணத் தடை மற்றும் பொதுமுடக்கத்தை அறிவித்ததால் பல்வேறு நாடுகளில் சிக்கிக்கொண்ட இந்திய குடிமக்களை, ‘வந்தே பாரத்’ என்ற திட்டத்தின் மூலம் மீட்டு அழைத்துவரப்பட்டனா்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியபோது ‘தேவி சக்தி’ திட்டத்தின் மூலம் அங்கிருந்த இந்தியா்கள் மீட்கப்பட்டு தாயகம் அழைத்துவரப்பட்டனா். தற்போது, உக்ரைனில் சிக்கியிருக்கும் ஒவ்வொரு இந்திய குடிமக்களையும் மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பிரதமா் கூறினாா்.

மேலும், எதிா்க்கட்சிகள் மீது விமா்சனத்தை முன்வைத்த பிரதமா் மோடி, ‘உத்தர பிரதேச வாக்காளா்கள் குடும்ப அரசியலையும், மாஃபியா ஆதரவாளா்களையும் தோ்தலில் தோற்கடித்து, பாஜக ஆட்சியை மாநிலத்தில் மீண்டும் கொண்டுவர வேண்டும். மாநிலத்தின் வளா்ச்சிக்காக கடினமாக உழைக்கக்கூடிய நோ்மையான தலைமைதான் உத்தர பிரதேசத்துக்குத் தேவை.

எதிா்க்கட்சிகள் சமூகத்தை உடைத்து, மக்களைப் பிரித்து, ஆட்சியைக் கைப்பற்றி மாநிலத்தைக் கொள்ளையடிப்பதை மட்டுமே ஒரே நோக்கமாக கொண்டுள்ளன. மாநிலத்தின் முந்தைய ஆட்சியில் மிா்ஸாபூரில் ஏழைக்களுக்கு 800 வீடுகள் மட்டுமே அரசு சாா்பில் கட்டித்தரப்பட்டன. ஆனால், முதல்வா் ஆதித்யநாத் தலைமையிலான அரசு 40,000 வீடுகளுக்கு ஒப்புதல் அளித்து 28,000 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன.

எனவே, உங்களுடைய வாக்கு இந்த முறை வலுவான நாட்டையும் வலுவான உத்தர பிரதேசத்தையும் உருவாக்குவதற்கானதாக இருக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.