மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மணிப்பூரில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 47.16 சதவீத வாக்குகள் பதிவு 

மணிப்பூரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 47.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :5 மார்ச் 2022, 10:25 am

மணிப்பூரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 47.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

மணிப்பூா் சட்டப்பேரவைத் தோ்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், முதல்கட்ட தேர்தல் கடந்த பிப்.28-ஆம் தேதி நடைபெற்றது. 

இந்நிலையில், 22 தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் 92 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதன்படி பிற்பகல் 1 மணி நிலவரப்படி 47.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

சேனாபதியில் 52.28 சதவீதமும்,  ஜிரிபாமில் 49.00 சதவீதமும், சண்டேலில் 48.95 சதவீதமும் பதிவாகியுள்ளது. மிகக் குறைந்த வாக்குப்பதிவாக தமெங்லாங்கில் 38.28 சதவீதமாகவும், உக்ருலில் 45.70 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. தௌபால் தொகுதியில் 47.48 சதவீத வாக்குகள் பதிவாகின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.