மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மணிப்பூர் வாக்குப்பதிவின்போது வன்முறை; ஒருவர் பலி

மணிப்பூரில் இரண்டாம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு 10 மாவட்டங்களில் 22 தொகுதிகளில் நடைபெற்றுவருகிறது.

News image

கோப்புப்படம்

Updated On :5 மார்ச் 2022, 7:54 am

மணிப்பூரில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில், கரோங் தொகுதியில் வன்முறை வெடித்துள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்குச்சூட்டில் ஒரு கொலை செய்யப்பட்டுள்ளார். 

மணிப்பூரில் இரண்டாம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு 10 மாவட்டங்களில் 22 தொகுதிகளில் நடைபெற்றுவருகிறது. 11 மணி நிலவரப்படி 28.20 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2017 தேர்தலில் 11 மணி நிலவரத்தை ஒப்பிடுகையில் 16.80 வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது.

தௌபால் மாவட்டம் மற்றும் நாகர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பாஜக கடும் சவாலை சந்தித்துவருகிறது. மாநிலத்தின் வெளிப்புறங்களில் அமைந்துள்ள மாவட்டங்கள், காங்கிரஸ் மற்றும் நாக மக்கள் முன்னணியின் கோட்டைகளாக திகழ்ந்துவருகிறது. இங்குதான் அடிக்கடி கடையடைப்பு சம்பவங்கள் நிகழ்ந்துவருகின்றன.

மணிப்பூரை பொறுத்தவரை, பலமுனை போட்டி நிலவிவருகிறது. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நிற்கும் இடங்கள் உள்பட அனைத்து தொகுதிகளிலும் ஆளும் பாஜக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. 

இன்று நடைபெற்றுவரும் தேர்தலில், முன்னாள் முதல்வர் ஒக்ரம் இபோபி சிங், முன்னாள் துணை முதல்வர் கைகங்கம் கங்மெய் ஆகியோர் களத்தில் உள்ளனர். இருவரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.