
உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கையை மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளீதரன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷியப் படைகள் கடந்த 10 நாள்களுக்கு மேலாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து உக்ரைனிலுள்ள இந்தியர்களை மீட்பதற்காக ‘ஆப்ரேஷன் கங்கா’ என்ற திட்டத்தை தொடங்கிய மத்திய அரசு, சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்களை மீட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | ரஷிய அதிபருடன் 50 நிமிடங்கள் பேசிய மோடி
இந்நிலையில், மீட்புப் பணிகள் குறித்து இணைஅமைச்சர் முரளீதரன் கூறியதாவது:
உக்ரைனிலுள்ள 20 ஆயிரம் இந்தியர்களில் 16 ஆயிரம் பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். 3,000க்கும் அதிகமானோர் உக்ரைனின் அண்டை நாடுகளில் உள்ளனர்.
600க்கும் அதிகமான மாணவர்கள் உக்ரைனின் சுமி நகரில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கத் தேவையான நடவடிக்கைகளை தூதரகம் செய்து வருவதாக தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.