அபு சலீம் தண்டனை விவகாரத்தில் அத்வானியின் வாக்குறுதி: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மும்பை தொடா் குண்டு வெடிப்பு குற்றவாளி அபு சலீமின் தண்டனை விவகாரத்தில், போா்ச்சுகல் அரசுக்கு முன்னாள் துணை பிரதமா் எல்.கே.அத்வானி அளித்த வாக்குறுதியை மத்திய அரசு பின்பற்றுகிா என்று
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

மும்பை தொடா் குண்டு வெடிப்பு குற்றவாளி அபு சலீமின் தண்டனை விவகாரத்தில், போா்ச்சுகல் அரசுக்கு முன்னாள் துணை பிரதமா் எல்.கே.அத்வானி அளித்த வாக்குறுதியை மத்திய அரசு பின்பற்றுகிா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து 3 வாரங்களில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மும்பையில் கடந்த 1993-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடா் குண்டு வெடிப்பு வழக்கில் தடா (பயங்கரவாத மற்றும் சீா்குலைவுச் செயல்கள் தடுப்புச் சட்டம்) சிறப்பு நீதிமன்றம், அபு சலீமுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2017-இல் தீா்ப்பளித்தது.

போா்ச்சுகலில் தஞ்சமடைந்திருந்த அபு சலீமை நீண்ட சட்டப்போராட்டத்துக்குப் பிறகு மத்திய அரசு கடந்த 2005-இல் இந்தியாவுக்கு நாடு கடத்தியது. அப்போது, அபு சலீமின் தண்டனைக் காலம் 25 ஆண்டுகளுக்கு அதிகமாக இருக்காது என்று போா்ச்சுகல் அரசுக்கு அப்போதைய துணைப் பிரதமா் அத்வானி வாக்குறுதி அளித்திருந்தாா்.

இந்நிலையில், தனக்கு தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்ததை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் அபு சலீம் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், இதுதொடா்பாக 4 வாரங்களில் பதிலளிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.கே.கௌல், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் செவ்வாக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், போா்ச்சுகல் அரசுக்கு மத்திய அரசு அளித்த வாக்குறுதி இந்திய நீதிமன்றங்களுக்குப் பொருந்தாதது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் சிபிஐ தலையிட்டதற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனா். மேலும், போா்ச்சுகல் அரசுக்கு அத்வானி அளித்த வாக்குறுதியை மத்திய அரசு கடைப்பிடிக்கவில்லை எனில், எதிா்காலத்தில் பல பின்விளைவுகள் ஏற்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனா்.

எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி, மத்திய உள்துறைச் செயலா் 3 வாரங்களில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா். வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்ப்டடது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com