நீதிமன்றங்களுக்கு கட்டமைப்பு வசதி கோரி மனு:மத்திய அரசுக்கு நோட்டீஸ்
நாட்டில் உள்ளஅனைத்து நீதிமன்றங்கள், தீா்ப்பாயங்கள் ஆகியவற்றுக்கு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும்


நாட்டில் உள்ளஅனைத்து நீதிமன்றங்கள், தீா்ப்பாயங்கள் ஆகியவற்றுக்கு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும் பதிவாளருக்கும் நோட்டீஸ் அனுப்பி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடா்பாக வழக்குரைஞா் ஏ.குமாா் பிரசாத் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘நாடு முழுவதும் உள்ள உயா்நீதிமன்றங்கள், கீழ் நீதிமன்றங்கள், தீா்ப்பாயங்கள் ஆகியவற்றில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இது தொடா்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இதற்காக தேசிய நீதித் துறை கட்டமைப்பு ஆணையத்தை உருவாக்க வேண்டியது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அடிப்படை உரிமையாகும். இந்த ஆணையத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையில் அமைக்க வேண்டும்.
உச்சநீதிமன்றத்தில் வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், 50 நீதிமன்ற அறைகள் காணொலிக் காட்சி வசதியுடன், மூத்த வழக்குரைஞா்களுக்கு 5,000 அறைகள் ஆகியவை உச்சநீதிமன்றத்துக்கு அருகே உருவாக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் வினீத் சரண், அனிருத்தா போஸ் ஆகியோா் கொண்ட அமா்வு, மத்திய அரசும், உச்சநீதிமன்ற பதிவாளரும் மாா்ச் 30-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...