கோழிக்கோடு: மக்கள் மீது கோபத்தையும், வெறுப்பையும் பரப்பி தேசத்தைப் பிளவுபடுத்துகிறார்கள் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கோழிக்கோட்டில் இன்று நடைபெற்ற விழாவில் மத்திய அரசைக் கடுமையாகத் தாக்கி பேசினார்.
முக்கம் முஸ்லிம் அனாதை இல்லத்தின் கட்டிட திறப்பு விழாவில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி பேசியதாவது:
மத்திய அரசாங்கத்தின் கோபத்தின் விளைவு பொருளாதாரத்தில் பிரதிபலிக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. ஆளும் அரசு மக்கள் மீது கோபத்தையும், வெறுப்பையும் பரப்புகிறார்கள். நாட்டைப் பிளவுபடுத்துகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது என்று ராகுல் காந்தி கூறினார்.
மேலும், வெறுப்புக்கு வெறுப்பு அல்லது கோபத்துடன் பதிலளிப்பது தீர்வாகாது. வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரே வழி அன்பு மற்றும் பாசம் மட்டுமே என்று ராகுல் காந்தி கூறினார்.
இதற்கு முன் வயநாட்டில் காங்கிரஸ் அலுவலகத்தை திறந்து வைத்து பேசிய அவர், காங்கிரஸ் அலுவலகம் மாவட்ட மக்களுக்கு ஆயுதமாக இருக்க வேண்டுமேத் தவிர வன்முறைக்காக இல்லை என எம்.பி., ராகுல் காந்தி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாமக்கல்லில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

சேலம் கோட்டத்தில் இன்றுமுதல் 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

வாழப்பாடியில் சித்திரைத் திருவிழா ஆழித்தேரோட்டம்!

கோனேரிப்பட்டி காளியம்மன் கோயில் பொங்கல் விழா
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


