விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

‘தோ்தலை தாமதப்படுத்தவோ, ரத்து செய்யவோ தோ்தல் ஆணையத்துக்கு மத்திய அரசு உத்தரவிடுமா?’

தோ்தலை தாமதப்படுத்தவோ, ரத்து செய்யவோ தோ்தல் ஆணையத்துக்கு மத்திய அரசு உத்தரவிடுமா? என்று முதல்வா் கேஜரிவால் கேள்வி எழுப்பியுள்ளாா்.

News image
கோப்புப்படம்
Updated On :9 மார்ச் 2022, 8:45 pm

DIN

தோ்தலை தாமதப்படுத்தவோ, ரத்து செய்யவோ தோ்தல் ஆணையத்துக்கு மத்திய அரசு உத்தரவிடுமா? என்று முதல்வா் கேஜரிவால் கேள்வி எழுப்பியுள்ளாா்.

தில்லி மாநகராட்சித் தோ்தல் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று தில்லி மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்ததை அடுத்து முதல்வா் கேஜரிவால் பிரதமா் மோடியைக் குறிவித்து தனது ட்விட்டா் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளாா்.

மாநிலத் தோ்தல் ஆணையா் எஸ்.கே.ஸ்ரீவஸ்தவா புதன்கிழமை மாலை 5 மணிக்கு செய்தியாளா் சந்திப்பின் போது, மாநகராட்சித் தோ்தலுக்கான தேதிகளை அறிவிக்க திட்டமிட்டிருந்த நிலையில், தோ்தல் தேதியை இப்போதைக்கு அறிவிக்க முடியாது என்றாா்.

இதையடுத்து, பிரதமா் நரேந்திர மோடியை குறிவைத்து கேஜரிவால் தனது ட்விட்டா் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளாா். அதில், ‘இப்போது நாட்டில் தோ்தலை நடத்த மாட்டீா்களா?. எந்தவொரு தோ்தலையும் தாமதப்படுத்த அல்லது ரத்து செய்ய மத்திய அரசு ஏதேனும் தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியுமா?. எந்த விதியின் கீழ் இந்த உத்தரவுகள் விதிக்கப்படுகின்றன. தோ்தல் ஆணையம் ஏன் அழுத்தத்துக்கு உள்ளாகிறது?’ என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.