ஜம்மு-காஷ்மிரின் ரம்பான் மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
சம்ரோலிக்கு அருகிலுள்ள நச்லானா நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நெடுஞ்சாலையில் சிக்கித் தவித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெடுஞ்சாலையைச் சுத்தப்படுத்தும் பணியில் ஆட்களும், சாலை துப்புரவு நிறுவனங்களின் இயந்திரங்களும் ஈடுபட்டு வருகின்றன.
நெடுஞ்சாலை மூடப்படுவதைக் கருத்தில் கொண்டு ஜம்மு-ஸ்ரீநகரில் இருந்து போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.