டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பஞ்சாபை இழந்தது; காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை?

பஞ்சாப் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், 90க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

News image
பஞ்சாபை இழந்தது; காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை?
Updated On :1 பிப்ரவரி 2024, 8:37 am

DIN

பஞ்சாப் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், 90க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஆம் ஆத்மி அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

பஞ்சாபில் ஆட்சியைப் பிடிக்க 59 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி, ஆம் ஆத்மி 90 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

90 இடங்களில் முன்னிலை வகிப்பதன் மூலம், பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி 18 இடங்களிலும், அகாலிதளம் -6, பாஜக - 2, இதர - 1 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. 

மொத்தமுள்ள 31 மாநிலங்களில் 6 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. ஆனால், இந்த ஆறு மாநிலங்களில் வெறும் மூன்று மாநிலங்களில் மட்டும்தான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்  முதல்வராக இருந்து வருகிறார். அதாவது, ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் தலைவர் முதல்வராக உள்ளார்.  தற்போது இந்த மூன்று மாநிலங்களில் பஞ்சாப் மாநிலத்தை காங்கிரஸ் இழந்துள்ளது.

இது மட்டுமல்லாமல் தமிழ்நாடு, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் ஆளுங்கட்சியின் கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது.

காங்கிரஸ் ஆளும் மாநிலமாக இருந்த பஞ்சாப் தற்போது ஆம் ஆத்மி வசம் சென்றுவிடும் என்பதால், நாட்டில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறும் மாநிலங்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து இரண்டாகக் குறைந்துள்ளது.

தற்போது, நாட்டிலேயே ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில்தான் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில பேரவைகளுக்கு நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன.

பஞ்சாபில் ஒரே கட்டமாக நடைபெற்ற தோ்தலில் 71.95 சதவீத வாக்குகள் பதிவாகின.  குறிப்பிட்ட இடைவெளியில் தோ்தல் முடிவுகளை வலைதளத்தில் தெரிந்து கொள்வதற்கான நடவடிக்கைகளையும் தோ்தல் ஆணையம் செய்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.