அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

உ.பி.யில் பாஜக வெற்றி பெற மாயாவதி, ஒவைசி உதவினர்: சஞ்சய் ரௌத்

உத்தரப்பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற மாயாவதி, ஒவைசி உதவியுள்ளதாக சிவசேனை கட்சியின் தலைவர் சஞ்சய் ரௌத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News image
Updated On :11 மார்ச் 2022, 11:38 am

DIN

உத்தரப்பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற மாயாவதி, ஒவைசி உதவியுள்ளதாக சிவசேனை கட்சியின் தலைவர் சஞ்சய் ரௌத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியான நிலையில், 4 மாநிலங்களில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி  ஆட்சி அமைக்கிறது.  உத்தரப் பிரதேசத்தில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பாஜக, ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.  அந்த மாநிலத்தில் ஒரே கட்சி தொடா்ந்து 2-ஆவது முறையாகத் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.

இதுகுறித்து சிவசேனை கட்சியின் தலைவர் சஞ்சய் ரௌத் கூறியதாவது, உத்தரப்பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற மாயாவதி, ஒவைசி உதவி புரிந்துள்ளனர்.  பாஜக வெற்றி பெற உதவிய 2 பேருக்கும் பத்ம விபூஷன், பாரத ரத்னா விருதுகளை வழங்க வேண்டும். உ.பி.யில் அகிலேஷ் யாதவின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது.

உ.பி. பாஜக மாநிலமாக இருந்தபோதும் சமாஜவாதி கட்சியின் வெற்றி இடங்கள் 3 மடங்கு அதிகரித்தது. நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது, நாங்கள் வருத்தப்பட ஒன்றுமில்லை, உங்கள் மகிழ்ச்சியில் நாங்களும் பங்கெடுத்துக்கொள்கிறோம். இருப்பினும் பஞ்சாபில் பாஜக போன்ற தேசிய கட்சி முற்றிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.