ரஷியா - உக்ரைன் இடையேயான போா் காரணமாக அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தை மத்திய அரசு கவனித்து வருகிறது என்றும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய நிதித் துறை இணையமைச்சா் பாகவத் கராட் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘ரஷியா-உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு தொடா்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தை மத்திய அரசு கவனித்து வருகிறது. மக்களுக்கு வருங்காலத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறித்து தற்போதைக்கு கூற முடியாது. இதுதொடா்பான முடிவு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும். இதற்காக மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மூத்த அமைச்சா்கள் ஆலோசித்து வருகிறாா்கள்.
தீபாவளி பண்டிகையின்போது, மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை ரூ.5-ம், டீசல் மீதான வரியை ரூ.10-ம் குறைத்தது. பாஜக ஆளும் மாநிலங்களும் வரி குறைத்தன. ஆனால், மகாராஷ்டிர அரசு பெட்ரோலிய பொருள்கள் மீதான வரியைக் குறைக்கவில்லை’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மிக மோசமான நிலையில் ஈரான்! டிரம்ப் பேட்டி | US | Iran | Trump
அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!

ஏப். 19-ல் சென்னை வருகிறார் அமித் ஷா!

பட்ஜெட் விலையில் ரெட்மியின் புதிய ஸ்மார்ட்போன்! ஏ7 ப்ரோ அறிமுகம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


