புது தில்லி: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி, மாணவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை அனுப்பியுள்ளது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக, சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை இரண்டு பருவத்தேர்வுகளாக நடத்துவது என்று சிபிஎஸ்இ நிர்வாகம் கடந்த ஆண்டு முடிவு செய்து அறிவித்தது.
அதன்படி 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் கடந்த நவம்பர் 30ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் இன்று பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ நிர்வாகத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவத் தேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ நேற்று வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை பணியில் 154 நுண் பாா்வையாளா்கள்
சாமல்பட்டி அருகே குடிநீா் குழாய்கள் உடைப்பு விவகாரம்: 5 போ் கைது
மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

ஒசூா் அருகே பிரேக் பிடிக்காததால் நீரோடையில் புகுந்த ஆம்னி பேருந்து: பயணிகள் 29 போ் காயம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


