எம்.பி. பதவியை ராஜிநாமா செய்கிறார் பகவந்த் மான்
பஞ்சாப் முதல்வராக வரும் 16ஆம் தேதி பதவியேற்க உள்ள நிலையில், பகவந்த் மான் தனது எம்.பி. பதவியை நாளை ராஜிநாமா செய்கிறார்.


பஞ்சாப் முதல்வராக வரும் 16ஆம் தேதி பதவியேற்க உள்ள நிலையில், பகவந்த் மான் தனது எம்.பி. பதவியை நாளை ராஜிநாமா செய்கிறார்.
பஞ்சாபில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை அவருடைய மாளிகையில் சனிக்கிழமை சந்தித்து ஆட்சியமைப்பதற்கு உரிமை கோரினார் பகவந்த் மான். ஆளுநரும் ஒப்புக்கொண்டதாக பகவந்த் மான் தெரிவித்தார்.
பதவியேற்பு விழா பகத் சிங்கின் கிராமமான கத்கர் கலனில் வரும் 16-ம் தேதி நடைபெறுகிறது. அவருடன் 16 எம்எல்ஏ-க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர். பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு பகவந்த் மான் அழைப்பு விடுத்துள்ளாா்.
இந்த நிலையில், பகவந்த் மான் தனது எம்.பி. பதவியை நாளை ராஜிநாமா செய்கிறார். சாங்ரூர் மக்களவைத் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பகவந்த் மான் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...