வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஸ்ரீநகரில் துப்பாக்கிச்சூடு: 3 லஷ்கர் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 லஷ்கர் -இ-தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

News image
Updated On :16 மார்ச் 2022, 7:32 am

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 லஷ்கர் -இ-தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

நவ்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகத் தகவல் கிடைத்ததும், பாதுகாப்புப் படையினர் அதிகாலை அப்பகுதியைச் சுற்றி வளைத்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

பதிலடி கொடுத்த பாதுகாப்புப் படைகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த நடவடிக்கையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

கொல்லப்பட்டவர்கள் சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த அடில் டெலி மற்றும் சாகிப் தந்த்ரே என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூன்றாவது நபர் உமர் டெலியை அடையாளம் காண அவரது குடும்பத்தினரை அழைக்கப்பட்டுள்ளது. 

இந்த  மூவரும் உள்ளூர் பயங்கரவாதிகள் என்றும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் ஜம்மு - காஷ்மீர் காவல்துறை ஐ.ஜி. விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்திலிருந்து ஒரு ஏகே 47 மற்றும் இரண்டு கைத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.