வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நாட்டில் புதிதாக 2,876 பேருக்கு கரோனா; 98 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,876 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

News image
நாட்டில் புதிதாக 2,876 பேருக்கு கரோனா
Updated On :16 மார்ச் 2022, 3:45 am

DIN

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,876 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேர கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது. புதிதாக 2,876 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 98 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 3,884 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 5,16,072ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 4,24,50,055 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 32,811 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.