குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

பஞ்சாப் காங். தலைவர் சித்து ராஜிநாமா

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், கோவாவை தொடர்ந்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவும் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

News image
நவ்ஜோத் சிங் சித்து (கோப்புப் படம்)
Updated On :16 மார்ச் 2022, 5:06 am

DIN

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், கோவாவை தொடர்ந்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவும் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூா் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதனைத்தொடா்ந்து கடந்த மாா்ச் 13-ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தோ்தலில் காங்கிரஸின் தோல்விக்கான காரணங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது கட்சியை வலுப்படுத்த தேவையான மாற்றங்களை மேற்கொள்ளுமாறு சோனியா காந்தியிடம் செயற்குழு கேட்டுக்கொண்டது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைமைச் செய்தித்தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘‘மாநில காங்கிரஸ் கமிட்டிகளை மறுசீரமைப்பு செய்ய வசதியாக தோ்தல் நடைபெற்ற 5 மாநிலங்களின் காங்கிரஸ் கமிட்டி தலைவா்களை ராஜிநாமா செய்யுமாறு சோனியா காந்தி கேட்டுக்கொண்டுள்ளாா்’’ என்று தெரிவித்தாா்.

இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து, தலைவர் பொறுப்பிலிருந்து ராஜிநாமா செய்வதாக சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முன்னதாக, உத்தரகண்ட் காங்கிரஸ் தலைவர் கணேஷ் கோடியால், கோவா காங்கிரஸ் தலைவா் கிரீஷ் சோடன்கர், உத்தரப் பிரதேசத்தின் தலைவர் அஜய் லல்லு ஆகியோர் பதவியை ராஜிநாமா செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.