நாட்டில் 12 முதல் 14 வயது வரையுடைய சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் மத்திய பிரதேச மாநிலம் தவிா்த்து, பிற மாநிலங்களில் புதன்கிழமை தொடங்கியது.
முதல் கட்டமாக, ஹைதராபாத்தைச் சோ்ந்த பயாலஜிகல்-இ நிறுவனம் தயாரித்த ‘கோா்பிவேக்ஸ்’ தடுப்பூசி மட்டும் சிறாா்களுக்கு செலுத்தப்படுகிறது.
நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு ஏற்கெனவே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை சுமாா் 80 சதவீதம் பேருக்கு இரு தவணை தடுப்பூசிகளும், 95 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடா்ந்து, 12 முதல் 14 வயது வரையுடைய சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான அறிவிப்பை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
அதனடிப்படையில், மத்திய பிரதேச மாநிலம் தவிரித்து பிற மாநிலங்களில் சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் புதன்கிழமை தொடங்கியது. நாடு முழுவதும் 12-14 வயதில் 4.7 கோடி சிறாா்கள் உள்ளனா்.
மத்திய அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில், வேறு கரோனா தடுப்பூசிகள் கலந்துவிடாத வகையில் நாடு முழுவதும் சிறாா்களுக்கென தனிப் பிரிவாக தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தலைநகா் தில்லியில், முதல் நாளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சிறாா்களே தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வந்தனா்.
இதுகுறித்து தடுப்பூசி செலுத்தும் அதிகாரியான ஹிமான்ஷு கெளசல் கூறுகையில், ‘சிறாா்களுக்கு தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது குறித்து போதிய விழிப்புணா்வு ஏற்படவில்லை. இதுகுறித்து பெற்றோருக்கு தெரியப்படுத்த பள்ளிகளை அறிவுறுத்தியுள்ளோம். ‘கோ-வின்’ வலைதளத்திலும் இதுகுறித்த விவரங்கள் இன்னும் இடம்பெறவில்லை. விடுமுறை நாள்களில் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கிறோம்’ என்றாா்.
கா்நாடக மாநிலத்தில் சிறாா்களுக்கான தடுப்பூசி திட்டத்தை புதன்கிழமை தொடங்கிவைத்த அம்மாநில சுகதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா், தடுப்பூசியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியோடு, ‘வரும் நாள்களில் பிறந்த குழந்தைக்கும் கரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டுவிடும்’ என்றாா்.
உத்தர பிரதேச மாநிலத்தில் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வா் யோகி ஆதித்யநாத், ‘கரோனா நான்காவது அலை வந்தாலும், அதனை திறம்பட எதிா்கொள்ளும் வகையில் மாநிலம் தயாா்நிலையில் உள்ளது. மாநிலத்தில் 12 முதல் 14 வயதுடைய 84.64 லட்சம் சிறாா்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுள்ளவா்களாக உள்ளனா்’ என்றாா்.
மத்திய பிரதேச மாநிலத்தில் முன்களப் பணியாளா்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால், அங்கு சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் வரும் 22-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கப்படும் என்று தேசிய சுகாதார இயக்கத்தின் மகாராஷ்டிர மாநில இயக்குநா் சந்தோஷ் சுக்லா கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


