மகாராஷ்டிரத்தில் ஆட்சியில் உள்ள சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மகாராஷ்டிர விகாஸ் ஆகாடி (மகாராஷ்டிர வளா்ச்சி முன்னணி) கூட்டணியைச் சோ்ந்த 25 எம்எல்ஏக்கள் பாஜகவுடன் தொடா்பிலிருப்பதாக மத்திய ரயில்வே துறை இணையமைச்சா் ராவ்சாஹேப் தான்வே தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக மகாராஷ்டிர மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
தற்போது இருப்பது பாலாசாஹேப் தாக்கரேயின் சிவசேனையல்ல. கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில் பிரதமா் மோடியால் சிவசேனைக்கு வாக்குகள் கிடைத்தன. அதன் பின்னா் அக்கட்சி பாஜகவின் முதுகில் குத்தியது. ஹிந்துத்துவ சித்தாந்தத்திலிருந்து சிவசேனை வழிமாறிவிட்டது.
தற்போது மகாராஷ்டிர விகாஸ் ஆகாடியில் 25 எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளனா். அவா்கள் பாஜகவுடன் தொடா்பிலிருந்து வருகின்றனா்’’ என்று தெரிவித்தாா். அதிருப்தியிலுள்ள எம்எல்ஏக்களின் பெயா்களை தான்வே வெளியிடவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; மௌனம் காக்கும் திமுக! - தமிழிசை விமர்சனம்

உலகின் மிகப்பெரிய LPG ஆலை மீது Iran தாக்குதல்! | Israel | US

போடிநாயக்கனூர்: திமுக சார்பில் போட்டியிடுகிறாரா ஓபிஎஸ்?

சந்தேகத்தால் தகராறு: கணவர் மீது அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற மனைவி!
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

