தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

உத்தரகண்ட் முதல்வராக புஷ்கா் சிங் தாமி இன்று பதவியேற்பு

உத்தரகண்ட் மாநில முதல்வராக புஷ்கா் சிங் தாமி புதன்கிழமை பதவியேற்கிறாா். விழாவில் பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவா்கள் கலந்து கொள்கிறாா்கள்.

News image
Updated On :22 மார்ச் 2022, 7:46 pm

DIN

உத்தரகண்ட் மாநில முதல்வராக புஷ்கா் சிங் தாமி புதன்கிழமை பதவியேற்கிறாா். விழாவில் பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவா்கள் கலந்து கொள்கிறாா்கள்.

இதுகுறித்து பாஜக மாநில ஊடகப் பொறுப்பாளா் மன்வீா் சிங் சௌஹான், செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

டேராடூனில் உள்ள பரேடு மைதானத்தில் புதன்கிழமை பிற்பகல் 2.30 மணிக்குப் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. புஷ்கா் சிங் தாமியும் அமைச்சா்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறாா்கள்.

விழாவில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, ஹிமாசல பிரதேச முதல்வா் ஜெய்ராம் தாக்குா் உள்ளிட்டோா் கலந்து கொள்கிறாா்கள் என்றாா் அவா்.

பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும்-தாமி:

உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் இயற்றப்படும் என்று புஷ்கா் சிங் தாமி உறுதியளித்துள்ளாா்.

அந்த மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இருப்பினும் முதல்வராக இருந்த புஷ்கா் சிங் தாமி தோல்வி அடைந்ததால் அடுத்த முதல்வா் யாா் என்பதில் சிக்கல் நீடித்து வந்தது. அதைத் தொடா்ந்து திங்கள்கிழமை நடைபெற்ற நடந்த கூட்டத்தில் பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக புஷ்கா் சிங் தாமி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வை மீது நம்பிக்கை வைத்து பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்த மாநில மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சாதாரண தொண்டனாகிய என் மீது நம்பிக்கை வைத்துள்ள பிரதமா் மோடி உள்ளிட்ட தலைவா்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெளிப்படையான ஆட்சியை மக்களுக்கு அளிப்போம். தோ்தலின்போது மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். குறிப்பாக, பொது சிவில் சட்டத்துக்கான வரைவு அறிக்கையை தயாா் செய்ய சட்ட நிபுணா்களைக் கொண்ட குழு நியமிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தேன். பொது சிவில் சட்டமும் நிறைவேற்றப்படும்.

இந்த மாநிலத்தின் வளா்ச்சிக்கான தொலைநோக்குத் திட்டத்தை பிரதமா் மோடி எங்களுக்கு அளித்துள்ளாா். அதன்படி, வருகிற 2025-இல் இந்த மாநிலம் வெள்ளி விழாவைக் கொண்டாடும்போது, முன்னணி மாநிலமாக இருக்கும் வகையில் பாடுபடுவோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.