ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

நவாப் மாலிக் ராஜிநாமா செய்யக்கோரி மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏக்கள் போராட்டம்

நவாப் மாலிக்கை ராஜினாமா செய்யக் கோரி மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்

News image
Updated On :23 மார்ச் 2022, 7:29 am

DIN

நவாப் மாலிக்கை ராஜினாமா செய்யக் கோரி மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்

கடந்த பிப்ரவரி 23-ஆம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட மாநில அமைச்சர் நவாப் மாலிக் பதவி விலகக் கோரி மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு வெளியே பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏ.,க்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். 

தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிர சிறுபான்மையின விவகாரங்கள் அமைச்சருமான நவாப் மாலிக், தாவூத் இப்ராஹிமின் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். அவரது நீதிமன்ற காவலை ஏப்ரல் 4 வரை சிறப்பு பிஎம்எல்ஏ நீதிமன்றம் நீட்டித்துள்ளது. 

இதையடுத்து மாலிக் பதவி விலக வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 25-ம் தேதி முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.