தொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

பெட்ரோல், டீசல் விலை: அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

News image

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி

Updated On :23 மார்ச் 2022, 6:08 am

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை கடந்த இரண்டு நாள்களாக அதிகரித்து வருகிறது. அதற்கு முன்பு வரை கடந்த சில நாள்களாக மாற்றம் செய்யப்படாமல் இருந்தது.

இதனை சுட்டிக்காட்டி 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு மாற்றம் செய்யாமல் இருந்ததாகவும், தேர்தல் முடிந்தவுடன் தற்போது விலையை உயர்த்துவதாகவும் குற்றம்சாட்டி மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.