முல்லைப் பெரியாறு அணை: பன்னாட்டுக் குழுவின் ஆய்வு தேவையில்லை

முல்லைப் பெரியாறு அணையைப் பன்னாட்டுக் குழு ஆய்வு  செய்ய வேண்டிய தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில்  தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை: பன்னாட்டுக் குழுவின் ஆய்வு தேவையில்லை

முல்லைப் பெரியாறு அணையைப் பன்னாட்டுக் குழு ஆய்வு  செய்ய வேண்டிய தேவையில்லை என்று உச்ச நீதிமன்றத்தில்  தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (மார்ச் 22) நடைபெற்ற விசாரணையில் கேரள மாநிலம் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

அதில், முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாகவும், புதிய அணையைக் கட்ட வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக சர்வதேச குழு அமைத்து அணையில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக இன்று (மார்ச் 23) உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், பன்னாட்டு நிபுணர்களைக் கொண்டு முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய வேண்டியத் தேவையில்லை என்று தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளதாகவும், வெள்ளப்பெருக்கு, கனமழை காரணமாக அணையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தமிழக அரசு பதில் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் முயற்சிக்கு கேரள அரசு இடையூறாக உள்ளதாகவும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிபதி கான்வில்கர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com