மார்ச் 28, 29இல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: எஸ்பிஐ

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் அரசின் நடவடிக்கை மற்றும் வங்கிச் சட்ட திருத்த மசோதா 2021க்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மார்ச் 28, 29 இல் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்ட
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் அரசின் நடவடிக்கை மற்றும் வங்கிச் சட்ட திருத்த மசோதா 2021க்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மார்ச் 28, 29 இல் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பாத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. 

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் அரசின் நடவடிக்கை மற்றும் வங்கிச் சட்ட திருத்த மசோதா 2021க்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வேலைநிறுத்தத்திற்கு பல்வேறு ஊழியர் சங்கங்கள், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் மற்றும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளதால் வங்கிச் சேவைகள் பெருமளவில் பாதிக்கப்படலாம் என்று நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

வேலைநிறுத்த நாள்களில் அதன் கிளைகள் மற்றும் அலுவலகங்களில் இயல்பான செயல்பாட்டை உறுதி செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை வங்கி மேற்கொண்டுள்ள நிலையில், ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் எஸ்பிஐ வங்கியின் பணிகள் குறைந்த அளவில் பாதிக்கப்படலாம் என்றும், வேலைநிறுத்தத்தால் ஏற்படக்கூடிய இழப்பை கணக்கிட முடியாது என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com