சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பொதுத்தேர்வு: ஏப்.1ல் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி உரையாடுகிறார். 

News image
Updated On :25 மார்ச் 2022, 3:51 am

DIN

நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுத்தவுள்ள மாணவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி உரையாடுகிறார். 

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வுக்கு முன்னர் மாணவர்களுடன் கலந்துரையாடும் ‘பரிஷா பே சச்சா’(தேர்வுக்கு தயாராவோம்) என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 

கரோனா காரணமாக கடந்த இரு ஆண்டுகள் தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. 

இதையடுத்து பிரதமா் நரேந்திர மோடி மாணவா்களுடன் உரையாற்றும் நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் மாணவர்களுடன் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துகொள்கிறார்கள். தேர்வு பயம், மன அழுத்தத்தைப் போக்க நாடு முழுவதும் உள்ள மாணவர்களுடன் காணொலி வாயிலாக உரையாடவிருக்கிறார். 

கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய கல்வித் துறையால் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.