நூலிழையில் 2 முறை உயிர் தப்பிய சிறுவன்: விடியோவை பார்க்கவே தைரியம் வேண்டும்

கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன், நூலிழையில் ஒரு முறை அல்ல இரண்டு முறை உயிர் தப்பிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நூலிழையில் 2 முறை உயிர் தப்பிய சிறுவன்: விடியோவை பார்க்கவே தைரியம் வேண்டும்
நூலிழையில் 2 முறை உயிர் தப்பிய சிறுவன்: விடியோவை பார்க்கவே தைரியம் வேண்டும்


கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன், நூலிழையில் ஒரு முறை அல்ல இரண்டு முறை உயிர் தப்பிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சைக்கிளை ஓட்டி வந்த எட்டு வயது சிறுவன், வாகனங்கள் செல்லும் பரபரப்பான சாலையை எதிர்பாராதவகையில் கடக்கிறான். அப்போது, ஒரு சில நொடிகளில் பைக்கில் அடிபட்டு படுகாயமடைய வேண்டிய சிறுவன், நல்வாய்ப்பாக பைக் அவனுக்கு முன்பு கடந்துவிட, பைக் மீது சைக்கிள் லேசாக மோதுகிறது. இதில் சைக்கிளிலிருந்து கண் இமைக்கும் நொடியில் தூக்கி எறியப்படுகிறான். சாலையத் தாண்டிச் சென்று விழும் சிறுவன் உடனே எழுந்து நிற்பதற்குள், அவனது சைக்கிள், பைக் பின்னால் வந்து கொணடிருந்த பேருந்தின் சக்கரங்களுக்குள் சிக்கி சுக்குநூறாகிறது.

என்ன நடந்தது என்று தெரியாமல், பின்னால் வந்த வெள்ளை நிற கார் மெதுவாக சாலையில் நிற்க, அக்கம் பக்கத்தினர் சிறுவனை நோக்கி ஓடுகிறார்கள.

அப்போது, சிறுவனுக்கு நாம் உயிரோடுதான் இருக்கிறோமா என்பதே சந்தேகமாகக்கூட இருந்திருக்கலாம், ஆனால், அவனுக்கு அதிர்ஷ்டம் இருந்ததால் உயிர்பிழைத்தான் என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்த நொடியே, சைக்கிள் போனதே என்ற வருத்தமும் அதனைத் தொடர்ந்து பெற்றோருக்கு என்ன சொல்வது என்ற கேள்விகளும் அவன் மூளைக்குள் ஓடிக் கொண்டிருக்கலாம்.

இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வேகமாகரப் பரவி வருகிறது. சுட்டுரையில் மட்டும் பல ஆயிரம் பேர் இந்த விடியோவை பார்த்துள்ளனர். 

இந்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகாவிட்டால், இப்படி ஒன்று நடந்தது என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள் என்று அந்த விடியோவை பகிர்ந்திருப்பவர்கள் தனது கருத்தாக பதிவிட்டுள்ளார்.

சாலையில் விளையாட்டாக சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த சிறுவன், எதிர்பாராதவிதமாக பெரும் விபத்தில் சிக்கவிருந்த காட்சியைப் பார்க்கும் பெற்றோர், பிள்ளைகளுக்கு சாலை விதிகளை கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும், சிறுவன் மீதே தவறு இருந்தாலும், அவன் அதிர்ஷ்டசாலி என்றும் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com