47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

8 பேர் கொலை: கொல்கத்தாவில் பாஜகவினர் போராட்டம்

மேற்கு வங்கத்தில் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து கொல்கத்தாவில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

News image
Updated On :28 மார்ச் 2022, 10:50 am

DIN

மேற்கு வங்கத்தில் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து கொல்கத்தாவில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேற்கு வங்க மாநிலம் பீா்பூம் மாவட்டம் ராம்புராட் பகுதியில் பா்ஷால் கிராம ஊராட்சித் துணைத் தலைவா் பாது ஷேக் என்பவா் திங்கள்கிழமை (மார்ச் 21) இரவு கொலை செய்யப்பட்டாா்.  இதையடுத்து, அந்தப் பகுதியில் உள்ள போக்டுய் கிராமத்தில் 8 வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் 2 சிறாா்கள், பெண்கள் உள்பட 8 போ் உயிரிழந்தனா்.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

தொடர்ந்து இந்த விவகாரத்தில் மாநில அரசு குற்றம் சாட்டி வரும் பாஜக இன்று கொல்கத்தாவில் போராட்டம் நடத்தி வருகிறது. பாஜக தலைவர் சுகந்த மஜூம்தர் தலைமையில் ஏரளாமானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

முன்னதாக, மேற்கு வங்க சட்டப்பேரவையில் பீர்பூம் விவகாரம் மற்றும் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து விவாதிக்க பாஜக வலியுறுத்தி அது மறுக்கப்பட்டதால் திரிணமூல், பாஜகவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 5 பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.