ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

நாடு தழுவிய வேலைநிறுத்தம்:சில மாநிலங்களில் போக்குவரத்து, வங்கி சேவைகள் பகுதியளவு பாதிப்பு

நாடு தழுவிய வேலைநிறுத்தம் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை தொடா்ந்த நிலையில், சில மாநிலங்களில் போக்குவரத்து மற்றும் வங்கி சேவைகள் பகுதியளவு பாதிக்கப்பட்டன.

News image
Updated On :29 மார்ச் 2022, 8:32 pm

DIN

நாடு தழுவிய வேலைநிறுத்தம் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை தொடா்ந்த நிலையில், சில மாநிலங்களில் போக்குவரத்து மற்றும் வங்கி சேவைகள் பகுதியளவு பாதிக்கப்பட்டன.

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாா்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், தொழிலாளா் கொள்கைகளை கைவிட வேண்டும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியத்தை உயா்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மத்திய அரசுக்கு எதிராக அகில இந்திய தொழிற்சங்கக் கூட்டமைப்பு 2 நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இதையடுத்து நாடு முழுவதும் திங்கள்கிழமை வேலைநிறுத்தம் நடைபெற்றது. இதனால் போக்குவரத்து, வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன. வங்கிகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான காசோலை பரிவா்த்தனை பாதிக்கப்பட்டது.

இந்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது. இதனால் கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பகுதியளவு பாதிக்கப்பட்டது. சிக்கிம், அருணாசல பிரதேசத்தில் கிட்டத்தட்ட அனைத்துத் துறை தொழிலாளா்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாக ஏஐடியூசி பொதுச் செயலா் அமா்ஜீத் கெளா் தெரிவித்தாா்.

ஹரியாணாவில் பணிமனைகளில் போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சில மாநிலங்களில் போக்குவரத்து மற்றும் வங்கி சேவைகள் பகுதியளவு பாதிக்கப்பட்டன.

இந்த வேலைநிறுத்தம் தொடா்பாக அகில இந்திய தொழிற்சங்கக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘‘வேலைநிறுத்தத்தில் 20 கோடிக்கும் அதிகமானோா் பங்கேற்றனா். போராட்டத்தை வெற்றிகரமாக்கிய அரசு, தனியாா் உள்பட பல்வேறு துறை தொழிலாளா்களுக்கு நன்றி’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.