ஊடகங்களில் தேவையற்ற அறிக்கைகளை அளித்ததற்காக உத்தரகண்ட் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் அக்கீல் அகமது கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் நீக்கப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. ஏற்கெனவே இருந்த பஞ்சாபையும் இழந்தது. இதையடுத்து கட்சியின் சார்பில் சில ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் உத்தரகண்ட் பேரவைத் தேர்தலின்போது ஊடகங்களில் தேவையற்ற அறிக்கைகளை அளித்ததற்காக உத்தரகண்ட் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் அக்கீல் அகமதுவை கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் நீக்கி கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.
பேரவைத் தேர்தலின்போது மின்னணு, அச்சு மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கைகள் ஏற்புடையதாக இல்லை என்றும் அவரின் தற்செயலான அறிக்கைகள் காரணமாக மக்களுக்கு கட்சி மீதான பார்வை மாறியுள்ளது என்றும் கூறியுள்ள காங்கிரஸ், ஒழுங்கு நடவடிக்கையின்படி ஆறு ஆண்டுகளுக்கு கட்சியின் முதன்மை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கியுள்ளதாக விளக்கம் தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பது தொடர்பாக அகமது பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
70 இடங்களைக் கொண்ட உத்தரகண்ட் மாநில பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

உலகின் மிகப்பெரிய LPG ஆலை மீது Iran தாக்குதல்! | Israel | US

போடிநாயக்கனூர்: திமுக சார்பில் போட்டியிடுகிறாரா ஓபிஎஸ்?

சந்தேகத்தால் தகராறு: கணவர் மீது அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற மனைவி!

நட்சத்திர தொகுதியான கொளத்தூா்!
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

