மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிகாரில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: 79.88% தேர்ச்சி

பிகாரில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையே பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது முடிவுகள் வெளியாகியுள்ளன. 

News image
Updated On :31 மார்ச் 2022, 11:15 am

பிகாரில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையே பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது முடிவுகள் வெளியாகியுள்ளன. 

பிகாரில் 16.11 லட்சம் மாணவர்கள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் 12,86,971 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதனால் மொத்த மாணவர்களில் 79.88 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

இதில் முதல் நிலையில் 4,24,587 மாணவர்களும், இரண்டாவது நிலையில் 5,10,411 மாணவர்களும், மூன்றாவது நிலையில் 3,47,637 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

2022ஆம் ஆண்டு பொதுத்தேர்விலும் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  தேர்வு முடிவுகளை biharboard.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.