எரிபொருள் விலை உயர்வு: தில்லியில் மத்திய அரசை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் போராட்டம்
அதிகரித்து வரும் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து, பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கெதிராக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி


புதுதில்லி: அதிகரித்து வரும் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து, பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கெதிராக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தலைமையில் தில்லியில் இன்று போராட்டம் நடைப்பெற்று வருகிறது.
இந்த போராட்டத்தில் ராகுல் காந்தி, அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று பாஜக தலைமையிலான மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் விஜய் சவுக்கில் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்களான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மல்லிகார்ஜுன் கார்கே, அபிஷேக் சிங்வி, கே.சி.வேணுகோபால், சக்தி சிங் கோஹில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
"கடந்த 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை 9 முறை உயர்த்தப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம். இந்த பிரச்னைக்காக காங்கிரஸ் கட்சி இன்று நாடு தழுவிய போராட்டத்தை நடத்துகிறது" என்று ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறினார்.
காங்கிரஸ் தலைவர்கள் 'எரிபொருள் விலை உயர்வை திரும்பப் பெறுங்கள்' என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே கூறுகையில், இன்று, ராகுல் காந்தி தலைமையில், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்துகிறோம் என்று கூறினார்.
"ஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிந்தவுடன், எரிபொருள் விலை உயரும் என்று நாங்கள் கணித்திருந்தோம். எரிபொருள் விலையை திரும்பப் பெற வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். எரிபொருள் விலையேற்றத்தால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை அரசாங்கத்தால் புரிந்து கொள்ள முடியவில்லை" என்று மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...