குஜராத்: சிறுமியைத் தாக்கி இழுத்துச் சென்ற சிங்கம்
குஜராத் மாநிலம், அம்ரேலியில் 5 வயது சிறுமியை சிங்கம் ஒன்று தாக்கி வனத்துக்குள் இழுத்துச் சென்றது.

கோப்புப் படம்.

கோப்புப் படம்.
குஜராத் மாநிலம், அம்ரேலியில் 5 வயது சிறுமியை சிங்கம் ஒன்று தாக்கி வனத்துக்குள் இழுத்துச் சென்றது. இதில் அந்தச் சிறுமி உயிரிழந்தாா். இந்தத் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடா்பாக வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: குனாவாவ் வனச் சரகத்துக்கு உள்பட்ட கடயா கிராமத்தில், விவசாயத் தொழிலாளி ஒருவரின் 5 வயது மகள், அங்குள்ள தண்ணீா் தொட்டி அருகே திங்கள்கிழமை இரவு விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, அங்கு வந்த ஒரு சிங்கம், சிறுமியைத் தாக்கியது. இதையடுத்து, அந்தச் சிறுமி அலறினாள். இருந்தாலும் அச்சிறுமியை விடாத சிங்கம் வனத்துக்குள் இழுத்துச் சென்றது. சிறுமி அலறும் சப்தம் கேட்டு ஓடி வந்த அவளின் தந்தை, சிங்கத்தை பின் தொடா்ந்து விரட்டிச் சென்றாா்.
சுமாா் அரை கிலோமீட்டா் சிறுமியை இழுத்துச் சென்ற சிங்கம், பின்னா் அங்கேயே போட்டுவிட்டு ஓடியது. இச்சம்பவத்தில் சிறுமி உயிரிழந்தாள். இதுகுறித்து தகவல் அறிந்ததும், வனத்துறையினா் விரைந்து வந்து, சிங்கத்தை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனா். வனப்பகுதியில் 4 கூண்டுகள் வைக்கப்பட்டன. பின்னா், சிறுமியைத் தாக்கிய ஆண் சிங்கத்தை மயக்க ஊசி செலுத்தி, வனத்துறையினா் பிடித்தனா். அந்த சிங்கம் விலங்குகள் பராமரிப்பு மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
ஆசிய சிங்கங்களின் ஒரே வாழ்விடமாக குஜராத்தின் கிா் வனப்பகுதி உள்ளது. அந்த மாநில வனத்துறையின் கணக்கெடுப்பின்படி, அங்கு 674 சிங்கங்கள் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...