நாட்டில் அதிகரிக்கும் கரோனா! புதிதாக 3,545 பேர் பாதிப்பு
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,545 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.


நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,545 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டு வருகின்றது. இன்று
வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள தகவலின்படி,
கடந்த 24 மணி நேரத்தில் (காலை 8 மணி நிலவரப்படி) 3,545 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த கரோனா பலி 5,24,002 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரேநாளில் 3,549 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,25,51,248 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.74 சதவிகிதமாக உள்ளது.
தற்போது 19,688 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 189.81 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...