
சமஸ்கிருதத்தை மேம்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
தில்லியில் மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு பேசினார்.
இதையும் படிக்க | மக்களுக்காக போராடுபவர்களுக்கே வாய்ப்பு கிடைக்கும்: ராகுல் காந்தி
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜே.பி.நட்டா, “சமஸ்கிருத மொழி என்பதற்கு இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி பயணிப்பது எனப் பொருள். சமஸ்கிருதத்தில் அறிவியல், கணிதம் மற்றும் தத்துவம் ஆகியவற்றின் சாராம்சங்கள் உள்ளன. இதுவெறும் மொழி அல்ல. சமூகம் பல்வேறு கோணங்களில் வளர்ச்சியடைவதற்கான வழி மற்றும் பண்டைய கால அறிவை சமஸ்கிருதம் கொண்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,” சமஸ்கிருதம் இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதி. இந்திய கலாச்சாரத்தைப் பாதுகாப்பவர்களுக்கு பாஜக என்றுமே துணை நிற்கும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சமஸ்கிருத மொழியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.