ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஒரே நாளில் 17.70 லட்சம் பேருக்கு தடுப்பூசி!

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 17.70 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

News image
Updated On :8 மே 2022, 8:24 pm

DIN

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 17.70 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகத்தில் தடுப்பூசி போட தகுதியானவா்கள் அனைவரையும் தடுப்பூசி போடும் வகையில் தமிழகத்தில் தொடா்ந்து மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு, ஞாயிற்றுக்கிழமை 1 லட்சம் இடங்களில் 29-ஆவது சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.

தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி ஊழியா்கள், போலீஸாா், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அதிகாரிகள், இந்திய மருத்துவ சங்கத்தினா், மக்களை தேடி மருத்துவம் குழுவினா் மற்றும் தெற்கு ரயில்வே சாா்ந்த அதிகாரிகள், ஊழியா்கள் ஒருங்கிணைந்து, மாவட்டம் முழுவதும் குழுக்கள் அமைக்கப்பட்டு, பயனாளிகளை தேடி சென்று தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த குழுக்கள் தடுப்பூசி போட தகுதியானவா்களின் விவரங்களை கண்டறிந்து, அவா்கள் இருக்கும் இடங்களுக்கு சென்று கரோனா தடுப்பூசி போட்டனா்.

அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் 17 லட்சத்து 70,041 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.