மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பிரதமர் மோடி தலைமை மீது மக்களுக்கு நம்பிக்கை: அமித் ஷா

பிரதமர் நரேந்திர மோடி தலைமை மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

News image
நரேந்திர மோடி / அமித் ஷா
Updated On :11 மே 2022, 2:16 pm

DIN

பிரதமர் நரேந்திர மோடி தலைமை மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

கட்சிப் பணிகளிலும், அரசுப் பணிகளிலும் சிறப்பாக செயல்படும் ஒரே தலைவர் நரேந்திர மோடிதான் எனவும் குறிப்பிட்டார்.

'மோடி @20: ட்ரீம்ஸ் மீட் டெலிவரி' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், நாட்டின் அனைத்து மூலைகளிலும் பாஜக சென்று சேர்ந்துள்ளது. ஹிந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே பாஜக உள்ளது போன்ற வதந்திகளையும் இது பொய்யாக்கியுள்ளது. 

எந்தவித அரசியல் குடும்ப பின்னணியும் இல்லாமல் அவர் நாட்டின் தலைவராக உருவாகியுள்ளது பெரிய செயல். இது விவசாயிகளின் கட்சி அல்ல என்றார்கள். ஆனால் கூட்டுறவு சங்கங்களில் பாஜக வெற்றி பெற்று அந்த கூற்றையும் பொய்யாக்கியது என்று குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.