
புது தில்லி: சண்டிகரில், பணத்தை திருடும் நோக்கத்தோடு, போலியான சோதனை நடத்திய நான்கு சிபிஐ அதிகாரிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சண்டிகருக்கு புதன்கிழமை சென்ற நான்கு சிபிஐ அதிகாரிகள், அங்குள்ள நிறுவனம் ஒன்றில் சோதனை நடத்தியுள்ளனர். ஆனால், அவர்கள் மீது சந்தேகம் கொண்ட நிறுவன ஊழியர்கள் அவர்களை சுற்றிவளைத்து, காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிக்க.. டிஎன்பிஎஸ்சி தேர்வில் ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை
விசாரணையில், அவர்கள் நான்கு பேருக்கும் சண்டிகரில் பணி எதுவும் இல்லை என்றும், அந்த சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது புகார்களோ வழக்கோ இல்லாமல், இவர்கள் பணத்தை திருடும் நோக்கத்தோடு சோதனை நடத்தியிருப்பதும் தெரிய வந்தது.
இது குறித்து சிபிஐ உயரதிகாரி கூறுகையில், இதுபோன்ற சம்பவங்களை சிபிஐ ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது. சம்பந்தப்பட்ட சிபிஐ அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுகக்ப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.