உணவுக்காக பணம் கேட்ட சிறுவனை கொலை செய்த காவலர்! ம.பி.யில் கொடூரம்

உணவுக்காக பணம் கேட்ட சிறுவனை கொலை செய்த காவலர்! ம.பி.யில் கொடூரம்

மத்தியப் பிரதேசத்தில் சாப்பாடு வாங்குவதற்காக பணம் கேட்ட சிறுவனை காவலர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
Published on

மத்தியப் பிரதேசத்தில் சாப்பாடு வாங்குவதற்காக பணம் கேட்ட சிறுவனை காவலர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மத்தியப் பிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில் ரத யாத்திரையின்போது காவலர் ரவி ஷர்மா, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கிருந்த சிறுவன், காவலர் ரவி ஷர்மாவிடம் பணம் கேட்டுள்ளான். ஆனால், காவலர் சிறுவனை விரட்டியுள்ளார்.

சாப்பாடு வாங்க வேண்டும் என்று கூறி சிறுவன் அடிக்கடி கேட்கவே,  ஆத்திரமடைந்தரவி ஷர்மா, சிறுவனைக் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். பின்னர் சிறுவனின் உடலை காரில் வைத்து பூட்டி பணி முடிந்த பின்னர் குவாலியரில் உடலை வீசிவிட்டார். 

தாதியா காவல்துறை கண்காணிப்பாளர் அமன் சிங் ரத்தோர் இதனை தெரிவித்துள்ளார். 

தான் மன உளைச்சலில் இருந்ததாகவும், சிறுவன் தன்னிடம் தொடர்ந்து பணம் கேட்டதால் கோபமடைந்ததாகவும் ரவி ஷர்மா, போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட காவலரை உடனடியாக பணியில் இருந்து நீக்க வேண்டும் என மாநில காவல்துறை தலைமையகத்திற்கு ரத்தோர் கடிதம் எழுதியுள்ளார்.

உணவுக்காக பணம் கேட்ட சிறுவனை காவலர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com