ஆக்கிரமிப்பு  கட்டடங்கள் இடிப்பு: ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடனான கேஜரிவால் ஆலோசனை ரத்து

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடன் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நடத்தவிருந்த ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ன.
ஆக்கிரமிப்பு  கட்டடங்கள் இடிப்பு: ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடனான கேஜரிவால் ஆலோசனை ரத்து

புது தில்லி: மேற்கு தில்லியில் உள்ள முன்ட்காவில் நான்கு அடுக்குமாடி அலுவலக கட்டட தீ விபத்தில் 30 பேர் உயிரிழந்ததை அடுத்து, சனிக்கிழமை நடைபெறவிருந்த ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடன் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நடத்தவிருந்த ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ன.

துணை முதல்வர் மணீஷ் சிசோடியா திறந்து வைக்க இருந்த மின்சார வாகன சார்ஜிங் பாயின்ட் திறப்பு விழா உள்பட  பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான கேரிவால், தில்லியில் பாஜக ஆளும் நகராட்சிகளால் தொடங்கப்பட்ட ஆக்கிரமிப்பு  கட்டடங்கள் மற்றும் அனுமதி பெறாத சட்டவிரோத கட்டங்களை இடிக்கும் பணிகளை தடுப்பது குறித்து கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் தனது இல்லத்தில் இன்று சனிக்கிழமை முக்கியமான ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், சிசிடிவி கேமராக்கள் மற்றும் ரவுட்டர்களை தயாரித்து அசெம்பள் செய்யும் நிறுவனத்தின் அலுவலகம் உள்ள நான்கு அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டடை அடுத்து ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர்களுடனான முதல்வர் கேஜரிவால் நடத்தவிருந்த ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து முதல்வர் கேஜரிவால், துணை முதல்வர் சிசோடியா ஆகியோர் தீ விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர்.

பின்னர், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும் எனவும், சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என முதல்வர் கேஜரிவால் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com