வடக்கு தில்லியில் இளைஞர் சுட்டுக்கொலை
தில்லியில் பாவனா பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் 19 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் இன்று (திங்கட்கிழமை) சுட்டு கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.


தில்லியில் பாவனா பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் 19 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் இன்று (திங்கட்கிழமை) சுட்டு கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ இறந்த இளைஞரின் பெயர் பருல். அவரின் உடலில் துப்பாக்கி குண்டுகளால் பல இடங்களில் காயங்கள் காணப்பட்டது. இந்த கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. காவல்துறை சம்பவம் நடந்த இடங்களில் கிடைத்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கொலையாளியை அடையாளம் காண முயற்சித்து வருகிறது. இறந்த இளைஞர் பருல் மீது கடந்த காலங்களில் காவல்துறையில் எந்த ஒரு வழக்கும் பதியப்படவில்லை.” என தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...