தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மாவட்ட பொறுப்புகளில் 50 வயதுக்குள்பட்டோருக்கு 50% ஒதுக்கீடு: ராஜஸ்தான் காங்கிரஸ்

ராஜஸ்தானில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 50 சதவீத பொறுப்புகளில் 50 வயதுக்குள்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாநில காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :17 மே 2022, 5:22 am

DIN

ராஜஸ்தானில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 50 சதவீத பொறுப்புகளில் 50 வயதுக்குள்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாநில காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் ’புதிய உறுதிக்கான சிந்தனை அமா்வு’ (நவ் சங்கல்ப் சிந்தன் ஷிவிா்) கடந்த வாரம் நடைபெற்றது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோட் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், கட்சியில் அனைத்து நிலைகளிலும் குழுக்களிலும் 50 வயதுக்குள்பட்டவா்களுக்கு 50 சதவீத பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில், ராஜஸ்தானில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த விதிமுறையை அமல்படுத்த மாவட்ட தலைவர்களுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், மாவட்ட குழுக்களில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோரின் பிரதிநிதித்துவம் அடங்கிய முன்மொழிவுகளை அடுத்த மூன்று நாள்களுக்குள் மாநில மையத்திற்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.