ராஜஸ்தானில் வினாத்தாள் கசிவு: காவலர் தேர்வு ரத்து
ராஜஸ்தானில் காவலர் துறையில் ஆட்சேர்ப்புத் தேர்வின் வினாத்தாள் கசிந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


ராஜஸ்தானில் காவலர் துறையில் ஆட்சேர்ப்புத் தேர்வின் வினாத்தாள் கசிந்ததையடுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மே 14-ம் தேதி நடைபெற வேண்டிய தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள் கசிந்துள்ளது. ஜோத்வாரா நகரில் உள்ள தேர்வு மையத்திலிருந்து வினாத்தாள் ஸ்கிரீன் ஷாட் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், வினாத்தாள் கசிவு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் கட்டாயம் தண்டிக்கப்படுவர் என்று தலைமைக் காவலர் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்வு மீண்டும் நடத்தப்படும் என்று காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் காவல்துறை கான்ஸ்டபிள் பதவிக்கான எழுத்துத் தேர்வு மே 13 முதல் மே 16 வரை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...