மழை பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார் கர்நாடக முதல்வர்: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு 

பெங்களூருவில் மழையால் சேதமடைந்த பகுதிகளை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று பார்வையிட்டார். மேலும், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவித்தார்.
மழை பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார் கர்நாடக முதல்வர்: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு 
Published on
Updated on
1 min read

பெங்களூருவில் மழையால் சேதமடைந்த பகுதிகளை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று பார்வையிட்டார். மேலும், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவித்தார்.

இதுதொடர்பாக முதல்வர் மேலும் கூறுகையில், 

பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பிகாரைச் சேர்ந்த தேவ்பிரத் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அங்கித் குமார் ஆகியோர் பெங்களூருவில் பைப்லைன் திட்டத்தில் பணிபுரிந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சமும், வீடுகளில் மழை நீர் புகுந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணமும் வழங்கப்படும் என்றார். 

நகரின் ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தேவையான இடங்களில் உணவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். 

800 கிலோ மீட்டர் தூரத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி முடிவடைய உள்ள நிலையில், 400 கிலோ மீட்டர் தூரத்துக்கு இன்னும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்தாண்டு பணியை எடுத்து முடிப்போம் என்றார்.

மேலும், மழைநீர் வடிகால்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கனமழை பெய்யும் போதெல்லாம் வாய்க்கால் நிரம்பி வழிகிறது. வடிகால் அமைப்பை சீரமைக்கும் பணி, பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதால், நிரந்தர தீர்வு காணப்படும். இதற்காக ரூ.1600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com