நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பாதுகாப்புத் துறையில் ஓய்வூதியமா?: மே 25க்குள் சான்றிதழ் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

பாதுகாப்புத்துறையில் ஓய்வூதியம் பெறுபவர்கள், தங்களுடைய வாழ்நாள் சான்றிதழை வரும் 25-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கும்படி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

News image
Updated On :18 மே 2022, 2:19 pm

பாதுகாப்புத்துறையில் ஓய்வூதியம் பெறுபவர்கள், தங்களுடைய வாழ்நாள் சான்றிதழை வரும் 25-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கும்படி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மாதாந்திர ஓய்வூதிய திட்டம் சரியாக நடைபெறுவதை உறுதி செய்யும் விதமாக ஓய்வூதியம் பெறுபவர்களிடம் சான்றிதழ் கோரியுள்ளது. 

மாதாந்திர ஓய்வூதியம் பெறுவது தொடர்பாக மே 17 ஆம் தேதி வரை பெறப்பட்ட தரவுகளை சரி செய்ததில், 43,774 பயனாளர்கள் தங்களின் சரியான விவரங்களை ஆன்லைன் மூலமாகவோ அல்லது வங்கிகள் வழியாகவோ சரிவர தாக்கல் செய்யவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், பழைய முறையில் ஓய்வூதியம் பெறும் சுமார் 1.2 லட்சம் ஓய்வூதியதாரர்கள், தங்களின் ஆண்டு அடையாளத்தை சரிவர பூர்த்தி செய்யவில்லை என்று தெரிய வந்துள்ளது. 

எனவே வரும் 25 ஆம் தேதிக்குள் இந்த ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.