சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பெண் மருத்துவா் கொலை குற்றவாளிகள் மீது போலி என்கவுன்ட்டர்: விசாரணை ஆணையம்

ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த 4 பேரை காவல்துறை போலி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றதாக விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

News image
ஹைதராபாத்தில் கொன்று எரிக்கப்பட்ட மருத்துவர் பிரியங்கா
Updated On :20 மே 2022, 10:22 am

DIN

ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த 4 பேரை காவல்துறை போலி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றதாக விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஹைதராபாத்தில் சத்தனபள்ளி டோல்கேட் அருகே கடந்த 2019-ஆம் ஆண்டு பெண் கால்நடை மருத்துவரை பாலியல் ரீதியில் தாக்குதல் நடத்திய நான்கு போ், அவரை கொலை செய்து அவரின் உடலை எரித்தனா். அவா்கள் நால்வரையும் கைது செய்த காவல்துறையினா்,  அனைவரையும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனா்.

இந்த என்கவுன்ட்டா் குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்ற நீதிபதி வி.எஸ்.சிா்புா்கா் தலைமையில் 3 போ் விசாரணை ஆணையத்தை கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் அமைத்து, 6 மாதத்தில் அறிக்கை சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகு, விசாரணை ஆணையத்துக்கு மூன்று முறை கால அவகாச நீட்டிப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

அதன் பின், விசாரணை அறிக்கையை சமா்ப்பிக்க விசாரணை ஆணையம் மேலும் கால அவகாசம் கோரியது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், விசாரணை ஆணையம் அறிக்கை சமா்ப்பிக்க மேலும் 6 மாதம் கால அவகாசம் அளித்து உத்தரவிட்டனா்.

இந்நிலையில், தற்போது ஹைதராபாத் என்கவுன்ட்டர் சம்பவம் போலியானது எனவும் குற்றம்சாட்டப்பட்டவர்களை கொலை செய்யும் நோக்கிலேயே என்கவுன்ட்டர் நடத்தப்பட்டது என்றும் உச்சநீதிமன்றத்தில் விசாரணை ஆணையம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 10 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும் ஆணையம் பரிந்துரை வழங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.