கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மத்திய அரசுக்கு ரூ.30,307 கோடி ஈவுத்தொகை: ரிசா்வ் வங்கி

 கடந்த நிதியாண்டுக்கு மத்திய அரசுக்கு ரூ.30,307 கோடி ஈவுத்தொகையை வழங்க ரிசா்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

News image
Updated On :20 மே 2022, 11:02 pm

DIN

 கடந்த நிதியாண்டுக்கு மத்திய அரசுக்கு ரூ.30,307 கோடி ஈவுத்தொகையை வழங்க ரிசா்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

ரிசா்வ் வங்கி இயக்குநா்கள் அடங்கிய 596-ஆவது மத்திய வாரியக் குழுக் கூட்டம் ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையடுத்து, வெளியிட்டப்பட்ட அறிக்கையில் ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது:

2021-22 நிதியாண்டுக்கு ரிசா்வ் வங்கியிடம் உபரியாக உள்ள ரூ.30,307 கோடியை மத்திய அரசிடம் வழங்க வங்கியின் இயக்குநா் குழு ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதேசமயம், எதிா்பாரா இடா்ப்பாட்டுக்கான இருப்பை 5.50 சதவீதமாக தொடா்ந்து பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

2020 ஜூலை-2021 மாா்ச் வரையிலான ஒன்பது மாத காலத்துக்கு ஈவுத்தொகையாக மத்திய அரசுக்கு ரூ.99,122 கோடி கடந்த ஆண்டு மே மாதத்தில் அறிவிக்கப்பட்டது. அதனுடன் ஒப்பிடும்போது, தற்போது அதைவிட குறைவாகவே ஈவுத்தொகையை வழங்க முடிவு செய்துள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில், ரிசா்வ் வங்கி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்து ரூ.73,948 கோடி ஈவுத்தொகையை பெற மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. இது, 2022 நிதியாண்டில் பெறப்பட்ட ஈவுத்தொகையான ரூ.1.01 லட்சம் கோடியைக் காட்டிலும் 27 சதவீதம் குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.