போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

உ.பி.யில் ஜாதிப் பாகுபாடு இல்லை: முதல்வா் யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேசத்தில் ஜாதிப் பாகுபாடு இல்லை என்று அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளாா்.

News image

யோகி ஆதித்யநாத்

Updated On :21 மே 2022, 6:29 pm

உத்தர பிரதேசத்தில் ஜாதிப் பாகுபாடு இல்லை என்று அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளாா்.

உத்தர பிரதேச சட்டப் பேரவையில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:

பொது வாழ்வில் முன்னேற்றம் காண ஒருவருக்குப் பொறுமையும் கண்ணியமும் அவசியம். அதேவேளையில், ஒவ்வொரு விஷயத்திலும் தலையிடுவோா், அரசு ஒப்பந்தங்களுக்கு அலைவோா் வீழ்ச்சி அடைவா்.

உத்தர பிரதேசத்தில் ஜாதிப் பாகுபாடு இல்லை. இந்த மாநிலத்தில் ஜாதிப் பாகுபாடு இருப்பது உண்மையானால் ஷாஜஹான்பூரில் இருந்து சுரேஷ் கன்னா எப்படி 9 முறையும், கான்பூரில் இருந்து சதீஷ் மஹானா எப்படி 8 முறையும் எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்?

நாடு மற்றும் மாநிலத்தின் நலன்களுக்காக மக்கள் பிரதிநிதிகள் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

நிறைவேற்ற இயலாத வாக்குறுதி அளிக்க வேண்டாம்:

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாநில ஆளுநா் ஆனந்திபென் படேல், உத்தர பிரதேச பேரவைக்கு 47 பெண் எம்எல்ஏக்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்தாா். பொதுமக்களிடம் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிக்க வேண்டாம் என்று அவா் எம்எல்ஏக்களுக்கு அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.