கடற்கரை, நகரங்களை விட கோவாவின் கிராமங்கள் அழகு: ஆளுநர்

கோவாவின் கிராமங்கள் அதன் கடற்கரைகளை விட மிக அழகானவை என்று ஆளுநர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 
கடற்கரை, நகரங்களை விட கோவாவின் கிராமங்கள் அழகு: ஆளுநர்
Published on
Updated on
1 min read

கோவாவின் கிராமங்கள் அதன் கடற்கரைகளை விட மிக அழகானவை என்று ஆளுநர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 

போண்டா துணை மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய பிள்ளை, 

ஆளுநரின் விருப்புரிமை நிதி, ராஜ்பவனின் விருப்பப்படி செலவிடப்படும் தணிக்கை செய்யப்படாத நிதியை, மக்கள் நலப் பணிகளுக்காக செலவிடப்படும். 

கோவா சுற்றுலாவின் மையமாக இருக்கிறது. ஆனால் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயணம் செய்த பிறகு என்னால் ஒன்றைச் சொல்ல முடியும். கடற்கரை பகுதிகளை நான் குறை கூறவில்லை. பெரும்பாலான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். 

ஆனால், கோவா கிராமங்கள் என்னைப் பொறுத்தவரை நகரங்களை விட அழகானவை. மேலும் எங்கள் கோயில்களும் கூட என்றார். 

கடந்தாண்டு கோவாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டதில் இருந்து, கோவாவின் கிராமப்புறங்களுக்குச் சென்று வருவதாகவும், இதுவரை கடலோர மாநிலத்தில் உள்ள 100 கிராமங்களுக்குச் சென்றிருப்பதாகவும் அவர் கூறினார். 

மேலும், நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ், முதியோர் இல்லங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு ஆதரவளித்தல் போன்ற பொது நலப் பணிகளுக்கு ஆளுநரின் விருப்புரிமை நிதியை செலவிட முயற்சி எடுத்துள்ளோம்.

எனக்கு சம்பளம் கிடைக்கிறது. அதில் நான் திருப்தி அடைகிறேன். ஒரு வழக்குரைஞராக எனது அந்தஸ்தும் அதுதான். இந்தத் தொகையை(விருப்புரிமை நிதி) தேவைப்படுபவர்களுக்கு வழங்கலாம் என்று முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com