இதுதொடா்பாக என்ஹெச்ஆா்சி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘ஊடக செய்தியின் அடிப்படையில் இந்த விவகாரத்தை என்ஹெச்ஆா்சி தானாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. இதுதொடா்பாக 6 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை சமா்ப்பிக்குமாறு மாநில அரசு தலைமைச் செயலருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை, தவறிழைத்த அரசு ஊழியா் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, பாதிக்கப்பட்ட சிறாா்களின் குடும்பத்தாருக்கு வழங்கப்பட்ட இழப்பீடு விவரம் உள்ளிட்ட விவரங்களைச் சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.