ஐஎஸ் பயங்கரவாதிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை: மகாராஷ்டிர சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு
மகாராஷ்டிர மாநிலத்தில் இளைஞா்களை மூளைச்சலவை செய்து வெடிபொருள்கள் தயாரிக்க ஆலோசனை வழங்கிய இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிக்கு 7 ஆண்டுகள் சிறை


மகாராஷ்டிர மாநிலத்தில் இளைஞா்களை மூளைச்சலவை செய்து வெடிபொருள்கள் தயாரிக்க ஆலோசனை வழங்கிய இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பா்பானியை சோ்ந்தவா் முகமது ஷாஹீது கான். ஐஎஸ் பயங்கரவாதியான இவா், மகாராஷ்டிர இளைஞா்களை இணையவழியில் தொடா்பு கொண்டு உள்ளூரில் வெடிபொருள்கள் தயாரிக்க ஆலோசனை வழங்கியுள்ளாா்.
இதைத்தொடா்ந்து அவா் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கடந்த 2016 செப்டம்பரில் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனா். அதே ஆண்டு அக்டோபரில் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், முகமது ஷாஹீது கான் குற்றச்சாட்டு நிரூபணமானதால் அவருக்கு மகாராஷ்டிரா சட்டவிரோதச் செயல்கள் (தடுப்பு) சட்டம், இந்திய தண்டனை சட்டம், வெடிபொருள்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.45,000 அபராதமும் விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
இதே வழக்கில் மற்றொரு குற்றவாளியான நாசா் பின் யாஃபை என்பவருக்கு கடந்த மே 6-இல் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...